SDB bank | Agricultural Loans | Samupa Saviya | SDB bank Sri Lanka

Agricultural Loans | Samupa Saviya | SDB bank Sri Lanka

வேளாண்மை கடன்கள்

சங்க உறுப்பினர்களின் விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப, இக்குறுகிய கால கடன்கள் பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், கால்நடைகளை வளர்ப்பதற்கும், சிறு முதல் நடுத்தர அளவிலான தோட்டங்கள் / பண்ணைகளின் ஒட்டுமொத்த செயற்பாட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும், அவசர உழைக்கும் மூலதனத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றன.

விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
  • நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில் 6 மாதகால சலுகைக் காலத்துடன் கூடியவாறு 1 வருடத்தினுள் மீளச்செலுத்தலாம்.
  • மாதாந்த தவணைகளாகவோ அல்லது தவணை அடிப்படையிலோ மீளச் செலுத்த முடியும்.
  • கடன் தொகையானது சங்கத்தின் மீளச்செலுத்தும் திறனை பொறுத்தது, உத்தரவாதங்களற்ற கடன் தொகையாக ரூ. 20 மில்லியன் வரையில் பெறலாம்.
 
தகைமைகள்
  • சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
  • ஒவ்வொரு கடன்களினதும் நிச்சயமற்ற தன்மையை பொறுத்து பொருத்தமான பிணைகள் கோரப்படலாம்.
  • கடன் தொகைகள் Corporate Top Saver Portfolio வின் மொத்த அளவுடன் சமப்படல் வேண்டும்.
அவசியமான ஆவணங்கள்
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
  • சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
  • சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
  • சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
  • இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
  • சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
  • கையொப்ப அட்டை.
E-Calendar 2025