SDB bank | Loans to purchase Computers and Laptops | SDB bank Sri Lanka

Loans to purchase Computers and Laptops | SDB bank Sri Lanka

டிஜிட்டல் மயமாக்கலின் இந்நவீன யுகத்தில், தொழில்கள், வணிகங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பமானது ஈடு இணையற்ற அவசியமாக காணப்படுகின்றது. எங்கள் தொழில்நுட்ப கடன் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற உபகரணங்களில் முதலீடு செய்வதற்கும், உலகளாவிய டிஜிட்டல் மயமாக்கலில் சேரவும், பின்வாங்காமல் இருக்கவும் உதவுகின்றது.

விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
  • நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில், மாதத்தவணைகளாக 3 வருடத்தினுள் மீளச்செலுத்தலாம்.
  • கடன் தொகையானது சங்கத்தின் மீளச்செலுத்தும் திறனை பொறுத்தது, உத்தரவாதங்களற்ற கடன் தொகையாக ரூ. 20 மில்லியன் வரையில் பெறலாம்.
 
தகைமைகள்
  • சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக்கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
  • ஒவ்வொரு கடன்களினதும் நிச்சயமற்ற தன்மையை பொறுத்து பொருத்தமான பிணைகள் கோரப்படலாம்.
அவசியமான ஆவணங்கள்
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
  • சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
  • சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
  • சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
  • இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
  • சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
  • கையொப்ப அட்டை.
E-Calendar 2025