சங்கங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை
கூட்டுறவு / சங்கங்கள் தமது எந்தவொரு அவசர மீள் கடன் அல்லது பணி மூலதன தேவைகளுக்கும் இம் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறலாம்,அத்துடன் 3 வேலை நாட்களினுள் பணம் பெறுவதற்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகின்றது.சங்கத்தின் திறனின் அடிப்படையில் கடன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.ஏனையவற்றினைப் போலவே இக் கடன்களும் ஆண்டு தோறும் மதிப்பாய்வு செய்யப்படும். எனவே, குறைந்தபட்ச ஆவணங்களுடன் கூட்டுறவு மற்றும் சங்கங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தொகையின் கீழ் கடன் தொகை வழங்கப்படுகின்றது.
விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
- குறைந்தபட்ச காகித வேலைகளுடன் 3 நாட்களினுள் கடன் வழங்கப்படும்.
- கடன் தொகை மற்றும் சங்கத்தின் திறன் ஆகியன ஆண்டு தோறும் மதிப்பாய்வு செய்யப்படும்.
- வாரிய கடன் குழு மற்றும் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல்களுடன் ரூ. 30 மில்லியன் வரையில் உத்தரவாதங்களற்ற கடன் தொகை
- முற்கூட்டி அங்கீகரிக்கப்பட்ட எல்லையின் கீழ் வழங்கப்பட்ட கடன் திட்டத்தின் அடிப்படையில் மீளச் செலுத்தும் திறன்.
தகைமைகள்
- சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
- ஒவ்வொரு கடன்களை பொறுத்து, அவற்றுக்கான ஆபத்தை குறைப்பதற்காக பொருத்தமான உத்தரவாதங்கள் அவசியமாகும்.
- CRIB கடன் விபரங்கள் மற்றும் கடன் அறிக்கைகள் என்பன கடன் வழங்கலுக்கு முன் மதிப்பாய்வு செய்யப்படும்.
அவசியமான ஆவணங்கள்
- முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
- சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
- சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
- சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
- இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
- சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
- கையொப்ப அட்டை.
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்