காசற்ற கொடுக்கல்வாங்கலை நோக்கி நாங்கள் முன்னேற்றகரமாக நகர்கையில் UPay உடனான டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல் எனும் புதிய யுகத்தினுள் காலடி எடுத்துவைப்பதற்கு SDB வங்கி இலங்கையர்களை வலுவூட்டுகின்றது. இச்செயலியானது பல்வேறு வகையான டிஜிட்டல் கொடுப்பனவுத் தெரிவுகளையும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளையும் பயன்படுத்துவதற்குப் பயனாளர்களை இயலுமாக்கும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த மொபைல் கொடுப்பனவுச் செயலியாகும். செயலியானது பல்செயற்பாட்டு மொபைல் பணப்பையாகச் செயற்படுவதுடன் இதனை SDB நடைமுறைக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்குடன் நேரடியாக இணைக்க முடியும். அதேபோல் ஏனைய வங்கிக் கணக்குகளுடனும் கடன் அட்டை மற்றும் வரவு அட்டை போன்ற கொடுப்பனவுத் தெரிவுகளுடனும் இணைக்க முடியும்.
நாளாந்தக் கொடுக்கல்வாங்கல்களை எளிமைப்படுத்துவதன் மூலம் இன்றைய துரித வாழ்க்கை முறைக்கும் இயங்குதிறன்மிகு வாழ்க்கை முறைக்கும் உதவுவுதற்காக எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை UPay வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மொபைல் கொடுப்பனவுச் செயலியினை SDB வாடிக்கையாளர்களினாலும் SDB வாடிக்கையாளர் அல்லாதோரினாலும் அன்ட்ரொய்ட் மற்றும் ஐஓஎஸ் தளங்களிற்காக இலவசமாகப் பதிவிறக்கம் செய்யமுடியும்.
- SDB வங்கிக் கணக்குடனும் ஏனைய வங்கிக் கணக்குகளுடனும் தடையின்றி இணையக்கூடியமை:
- உற்பத்திகளையும் சேவைகளையும் கொள்வனவு செய்தல்
- நாளாந்தக் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்ளல்
இவை அனைத்தையுமே கையில் காசினைக் கொண்டு அலைந்து திரியும் பிரச்சினை இன்றி நிறைவேற்ற முடியும்.
- கடன் அட்டையினை அல்லது வரவு அட்டையினை எடுத்துச் செல்கையில் அவற்றினைத் தொலைத்து விடும் அல்லது அவற்றினை எங்கேயாவது கைதவறி வைத்துவிடும் சந்தர்ப்பத்தினை அகற்றுவதற்காக UPay செயலி மூலமாக நேரடிக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக கடன் அட்டையினை அல்லது வரவு அட்டையினைப் பாதுகாப்பாக இணைத்தல். கூட்டுக் கொடுப்பனவுகளை ஒரு பிரச்சினையாக்காமல் இருப்பதற்காக, கட்டணப் பட்டியலினைப் பிரிக்கும் தெரிவினையும் இச்செயலி வழங்குகின்றது.
- ஈ செனலிங், திரைப்பட டிக்கட்டுக்கள், பொதுப் பயன்பாடுகள் மற்றும் ஏனைய வியாபாரப் பொருட்கள் போன்றவற்றிற்கு நேரடியான அணுகலை வழங்குகின்ற வர்த்தகத் தளத்தினைப் பயன்படுத்தல்;. இந்தக் கொடுப்பனவுகளைத் தன்னியக்கமாக்க முடியும், தேடிக் கண்டுபிடிக்க முடியும் மற்றும் முகாமைத்துவம் செய்யமுடியும்.
- இணைக்கப்பட்ட கணக்குகளில் இருந்து அல்லது அட்டைகளில் இருந்து மொபைல் தொலைபேசிக்கு நேரடியான மீள் நிரப்பல்கள்
- சர்வதேசக் கொடுப்பனவு வசதிப்படுத்துனர்களுடன் விசேட பங்காண்மை
- 24/7 வர்த்தக உதவி
- UPay இனால் தயாரிக்கப்படும் மாதாந்த நிதி மற்றும் கொடுக்கல் வாங்கல் இலத்திரனியல் அறிக்கைகள்
- SDB வாடிக்கையாளர்களுக்காக SDB குறுஞ்செய்தி வங்கிச் சேவை வசதியுடனான சகல UPay கொடுக்கல்வாங்கல்களுக்கும் குறுஞ்செய்தி மூலமான அறிவித்தல்கள்
- எங்கிருந்தும் எந்தநேரத்திலும் அணுகக்கூடிய உயர் வசதி
- பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் பல்வேறு வரவு அட்டைகள் மற்றும் கடன் அட்டைகள் கொண்ட நேரடியான கொடுப்பனவுத் தளங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் எண்ணற்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள்
- உறுதிப்படுத்தல் கடவுச்சொல் (Password) மற்றும் தனிப்பட்ட அடையாளப்படுத்தல் இலக்கம் (PIN) ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட்ட செயலியின் அணுகலுடன் உயர் பாதுகாப்பு
- இலங்கை முழுவதும் ஒன்லைன் வழியேயும் ஓப்லைன் வழியேயும் அதிகரித்து வரும் வர்த்தக நிலையங்களினால் பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படல்
- SDB வாடிக்கையாளர்கள் பங்காளர் மேம்பாடுகளையும் கவர்ச்சி மிக்க வட்டி வீதங்களையும் அணுகல்
- தனிப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவம்