SDB bank | Investment Plans in Sri Lanka

Investment Plans in Sri Lanka

SDB ஆயோஜனவுடன் சேர்ந்து, பெரிதாகத் திட்டமிட்டு, உங்களது எதிர்காலத்திற்காக முன்னோக்கியே திட்டமிடுங்கள். இது ஒரு திடமான மற்றும் உத்தரவாதப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தினால் மாத்திரம் வழங்கப்படக்கூடிய நிதிச் சுதந்திரத்தினை வாடிக்கையாளர்களுக்கு இயலுமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிசிறந்த முதலீட்டுத் திட்டமாகும். தெரிவுசெய்வதற்கான பரந்த வீச்சிலான முதலீட்டு இலக்குகளின் தொகுதியினையும் காலப் பகுதியினையும் SDB ஆயோஜன வழங்கி, எதிர்காலத்தினை உறுதிப்படுத்தி, மன அழுத்தமற்ற நிதிப் பாதுகாப்பிற்கான சிறந்த தீர்வினை வழங்குகின்றது.

இப்போது விசாரிக்கவும்

முதலீட்டு கல்குலேட்டர்

LKR
மாதாந்த முதலீடு = LKR 0.00
அம்சங்களும் நன்மைகளும்
  • முதலீட்டுக் காலப்பகுதியின்போது வட்டி வீதத்தினை அதிகரிப்பதற்கான சாத்தியத்துடன் நியம சேமிப்புத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் உயர்வட்டி வீதங்கள்
  • மாதாந்த முதலீட்டுக் கொடுப்பனவுத் திகதி வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்பத் தீர்மானிக்கப்படும்
  • இலக்குத் தொகை: முதலீட்டுக் காலப்பகுதியும் வாடிக்கையாளரினால் தெரிவு செய்யப்படும்
    • இலக்குத் தொகை: ஆகக்குறைந்தது 15,000 ரூபாய் முதல் ஆகக்கூடியதானது 1 கோடி ரூபாய் வரை
    • முதலீட்டுக் காலப்பகுதி: ஆகக்குறைந்தது 1 வருடம் முதல் ஆகக்குறைந்தது 10 வருடங்கள்
  • நாளாந்த அடிப்படையில் சிறு தொகையினைச் சேமிக்கும் வாய்ப்புடன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வாடிக்கையாளரிடமே சென்று வழங்கும் வங்கிச் சேவை வசதிகள், இது தொல்லைகளற்ற நேரத்தைச் சேமிக்கின்ற முதலீட்டுத் தீர்வாகும்
தகைமை
  • 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் ஆயோஜன கணக்கினைத் திறக்க முடியும்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)

Sri Lanka Deposit Insurance Scheme
வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல்படுத்தப்பட்ட இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்துடன் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வைப்பாளர் ஒருவருக்கு இழப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கொடுப்பனவு ஆகக்கூடியது 1,100,000 ரூபாயாகும். - https://www.cbsl.gov.lk/en/sri-lanka-deposit-insurance-scheme