SDB bank | Home Loans | SDB bank Sri Lanka | Low Interest Rate

Home Loans | SDB bank Sri Lanka | Low Interest Rate

உங்களது கனவு இல்லத்தினை யதார்த்தமாக்குவதற்கு மிகவும் தீவிரமான நிதிக் கடப்பாட்டுக்குத் தயாரா?    SDB வங்கி ஆகிய நாங்கள் வீட்டுக் கடன்களைச் சிக்கலற்றதாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் வெளிப்படைத்தன்மைமிக்கதாகவும் ஆக்கி உங்களது வீடு என்கின்ற இலக்கிற்கான உரித்தாண்மையினை அடைவதற்காக உங்களுக்குச் சிறந்த வாய்ப்புக்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகின்றோம்.  வீட்டினை நிர்மாணிப்பதாகவோ அல்லது கொள்வனவு செய்வதாகவோ, காணியொன்றினைக் கொள்வனவு செய்வதாகவோ, அரைவாசி கட்டப்பட்ட உங்களது வீட்டினைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அதனை விஸ்தரிப்பதாகவோ அல்லது இப்பொழுது நீங்கள் வாழும் இல்லத்தினை மாற்றவோ அல்லது புதுப்பிப்பதற்காகவோ, எதுவாக இருப்பினும் உங்களது வருமானம் மற்றும் வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக உங்களது வீட்டுக்கடன் தேவைப்பாடுகளை எங்களினால் பூர்த்திசெய்ய முடியும்.

அம்சங்களும் நன்மைகளும்
  • நீண்ட மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி
  • நெகிழ்வுத்தன்மைமிக்க அணுகுமுறை மற்றும் விரைவான அங்கீகாரம்
  • கவர்ச்சியும் போட்டித்தன்மையும் மிக்க குறைந்த வட்டி வீதங்கள்
  • நாடு தழுவிய எமது கிளை வலையமைப்பின் சௌகரியம்
 
தகைமை
  • தனிப்பட்ட முறையிலோ அல்லது உங்களின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்தோ கிரமமான மாதாந்த வருமானத்தினை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மாதாந்தக் கடன் கடப்பாட்டினைப் பூர்த்திசெய்வதற்கும் வாழ்க்கைச் செலவுகளையும் ஏனைய செலவுகளையும் பூர்த்திசெய்வதற்கும் இந்த வருமானம் போதியதாக இருக்கவேண்டும்.
கடன் தொகை
  • உங்களின் தேவை மற்றும் வருமானத்தில் தங்கியுள்ளது

E-Calendar 2025