SDB bank | Personal Loans Sri Lanka | SDB bank | Loans | Micro Loans

Personal Loans Sri Lanka | SDB bank | Loans | Micro Loans

உங்களுக்குப் பாரிய முதலீடு அல்லது அவசரமான கொள்வனவு ஏதாவது தேவைப்படின், தனிப்பட்ட கடன் தேவைப்படின் அல்லது உங்களது கனவுகளினை யதார்த்தமாக்க வேண்டுமாயின்; தனிப்பட்ட தேவைகள் மற்றும் வருமான மட்டங்களுக்குத் தீர்வாகத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட, நெகிழ்வுத்தன்மையான, துரிதமான, கடன் தீர்வுகளை வங்கி நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குகின்றது.

அம்சங்களும் நன்மைகளும்
  • நிரப்பும் வசதி: நீங்கள் பெற்றுக்கொண்ட தனிப்பட்ட கடனின் பகுதியினை நீங்கள் மீளச் செலுத்திய பின்னர், உங்களின் தனிப்பட்ட கடனினை மீண்டும் புதுப்பிப்பதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்
  • நிலையான அல்லது மிதக்கும் வட்டி வீதங்களுக்கான தெரிவினை நீங்கள் கொண்டுள்ளீர்கள்
  • தேவையான சகல ஆவணங்களுடனும் கடன் விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பித்த பின்னர், ஆகக் கூடுதலாக மூன்று வேலை நாட்களினுள் உங்களின் கடன் செயன்முறைப்படுத்தப்படும்
  • தொழில்ரீதியானவர்களுக்கு உத்தரவாதமளிப்பவர்கள் தேவையில்லை
  • இலகுவான மற்றும் சௌகரியமான விண்ணப்பச் செயன்முறை
  • 10 வருடங்கள் வரையிலான மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி(ஆகக்கூடிய மீள் கொடுப்பனவுக் காலப்பகுதி உங்களின் வயது மற்றும் எஞ்சியுள்ள சேவைக்காலம் ஆகியவற்றில் தங்கியுள்ளது)
  • கடன் பாதுகாப்புக் கவசம்
  • உங்களின் செலவழிக்கத்தக்க வருமானம், மீள் கொடுப்பனவு ஆற்றல் மற்றும் தேவைப்பாடுகளின் அடிப்படையில் ஆகக்கூடுதலான கடன் தொகை நெகிழ்வுத்தன்மை மிக்கதாக இருக்கும்.
 

தகைமை

  • நீங்கள் நிறுவனம் ஒன்றின் உறுதிப்படுத்தப்பட்ட ஊழியராக இருக்கவேண்டும் (அரசாங்கம் / அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள / பிரசித்திபெற்ற தனியார் துறை நிறுவனம்)
  • உங்களின் கிரமமான வருமானம் / கடன் மீள்கொடுப்பனவு SDB வங்கியிலுள்ள கணக்கொன்றிற்கு அனுப்பப்படும்.
  • 18 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கவேண்டும் (தொழில் நிபந்தனைகளில் தங்கியுள்ளது)
  • தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகக்குறைந்த நிலையான சம்பளம் 20000.00 ரூபாவாக இருக்கவேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
  • உரியமுறையில் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்
  • நடப்புத் தொழில் வழங்குனரிடமிருந்து தொழிலினை உறுதிப்படுத்தும் கடிதம்
  • உங்களின் SDB வங்கிக் கணக்கிற்குச் சம்பளத்தினை/ கடன் மீள்கொடுப்பனவினை அனுப்பிவைப்பதற்கான பொறுப்பினை ஏற்றல்
  • அண்மையில் பெற்றுக்கொண்ட சம்பளச் சிட்டை
  • உங்களின் பெயர் மற்றும் முகவரியினைக் கொண்ட அண்மைய பயன்பாட்டுப் பட்டியல் மற்றும் வங்கியினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதாவது துணை ஆவணம்
E-Calendar 2025