SDB bank | Savings Accounts for Entrepreneurs | SDB bank Sri Lanka

Savings Accounts for Entrepreneurs | SDB bank Sri Lanka

தேசிய அபிவிருத்தியில் இலங்கையின் முன்னணிப் பங்காளர் என்கின்ற ரீதியில் SDB இல் உள்ள நாம் எதிர்காலச் சந்ததியின் அபிலாiஷகள், எதிர்பார்ப்புக்கள், கனவுகள் ஆகியவை நுட்பமான நிதித் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதில் நாம் வகிக்கின்ற முக்கியமான வகிபாத்திரத்தினைப் புரிந்துகொள்கின்றோம்.  எனவே, உங்களது பூரணமான ஆற்றலினை அறிந்துகொள்ள அபிலாஷை கொண்டுள்ள புதிய சிந்தனையாளர்களினையும் தொழில் முயற்சியாளர்களையும் கொண்டுள்ள இளம் இலங்கைப் பரம்பரையின் ஓர் அங்கமாக நீங்கள் இருந்தால், எமது SDB ஜாவய இளைஞர் சேமிப்புக் கணக்குடன் நீங்கள் உறுதியான நிதி உபாயமார்க்கத்தினை உருவாக்கிப் பேணுவதற்கு உதவுவதன் மூலமாக வெற்றிக்கான உங்களது குறிக்கோளுக்கு உதவுவதை SDB நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்சங்களும் நன்மைகளும்
கணக்கு இருப்பு
500 ரூபா முதல் 999,999.00 வரை
வட்டி விகிதம் (p.a)
3.00%
கணக்கு இருப்பு
1 மில்லியன் ரூபா மற்றும் அதற்கு மேல்
வட்டி விகிதம் (p.a)
3.25%
  • 24 மாதங்களுக்கு 100000.00 ரூபா கணக்கு மீதியினைத் தமது கணக்கில் பேணுவோருக்காகப் பிள்ளையொன்று பிறக்கும்போது SDB தாயத சிறுவர் முதலீட்டுச் சான்றிதழ் அல்லது ஆடைகள்/ காலணிகள் அல்லது பயிற்சி/ சாதனங்கள் வாங்குவதற்காக 4,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான குறைந்த வட்டியிலான கடன்கள்
  • தொழில் முயற்சியாளர்களுக்கான ஆற்றலுருவாக்க, சுய தொழில்வாய்ப்பு மற்றும் திறன் விருத்திப் பயிற்சி
  • அரசாங்கத் துறையில் அல்லது தனியார் துறையில் உறுதியான தொழில் வாய்ப்பினைக் (நிரந்தரமான தொழில் பதவிநிலை) கொண்டுள்ள கணக்கு வைத்திருப்போருக்கான விசேட தனிப்பட்ட கடன்கள்
  • நாடு முழுவதும் உள்ள SDB வங்கி ATMகளில் அல்லது வேறு VISA ATM களில் பயன்படுத்தப்படக்கூடிய SDB VISA கடன் அட்டை. நாடு முழுவதும் உள்ள VISA குறியீட்டினைக் கொண்டுள்ள வியாபார நிலையங்களில் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதற்காகக் கடன் அட்டையினைப் பயன்படுத்த முடியும்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தகைமை
  • இலங்கையரான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களினால் ஜாவய இளைஞர் சேமிப்புக் கணக்கினைத் திறக்க முடியும்
  • ஆகக்குறைந்த ஆரம்ப வைப்பு ரூ.500/-
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)

Sri Lanka Deposit Insurance Scheme
வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல்படுத்தப்பட்ட இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்துடன் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வைப்பாளர் ஒருவருக்கு இழப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கொடுப்பனவு ஆகக்கூடியது 1,100,000 ரூபாயாகும். - https://www.cbsl.gov.lk/en/sri-lanka-deposit-insurance-scheme

E-Calendar 2025