ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஒப்பற்ற குத்தகைத் தீர்வுகளை வழங்குவதில் SDB குத்தகையானது தொடர்ச்சியாகக் கடப்பாடு கொண்டுள்ளது. இது எவ்விதமான பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்குத் தீர்வினை வழங்குகின்றது.
அம்சங்களும் நன்மைகளும்
- போட்டித்தன்மைமிகு விகிதங்களுடன் நெகிழ்வுத்தன்மைமிகு மீள்கொடுப்பனவுத் திட்டங்களுடன் வர்த்தகத் தேவைப்பாடுகளுக்குப் பொருந்தும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குத்தகைப் பொதி.
- முதிர்ச்சிக் கொடுப்பனவுகள் மீதான கவர்ச்சிமிகு கழிவுகள்
- நாடு முழுவதிலுமுள்ள கிளை வலையமைப்புக்கள் மூலமாகக் குத்தகை வசதிகளுக்கான இலகுவான அணுகல்
- தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கு குத்தகை வசதிகள் உள்ளன
தகைமை
- 18 வயதிற்கு மேற்பட்ட, தேவையான மீள்கொடுப்பனவு ஆற்றலைக்கொண்ட, SDB கடன் தெரிவடிப்படையினைப் பூர்த்தி செய்கின்ற எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் SDB குத்தகை வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- உரிய முறையில் நிரப்பப்பட்ட குத்தகை விண்ணப்பப்படிவம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
- வருமானத்தை உறுதிப்படுத்தும் வங்கிக்கூற்றுக்கள்
- குத்தகைக்கு எடுக்கப்படவுள்ள வாகனம் அத்துடன் / அல்லது இயந்திரத்தின் கட்டணப் பட்டியலும் பெறுமதிக் கணிப்பு அறிக்கையும்
- வியாபாரப் பதிவு
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்