பூரணமான உத்தமாவி நிதித் தீர்வுப் பொதியின் ஓர் அங்கமாக SDB வங்கியானது பெண் தொழில் முயற்சியாளர்களுக்குக் கடன்களை வழங்கி எமது உள்ளூர்ப் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்ற, சுயமாக இயங்குகின்ற பெண்களின் பல்வேறு வியாபார நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது.
அம்சங்களும் நன்மைகளும்
- இரண்டு உத்தரவாதப்படுத்துனர்களுடன் 10 இலட்சம் ரூபாய் வரையிலான கடன் வசதிகள்
- மூலதன நிதியிடலுக்காக 5 வருடங்கள் வரையிலும் உழைக்கும் மூலதனத்துக்காக 2 வருடங்கள் வரையிலுமான மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி
- வியாபாரத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட உரித்தாண்மையினைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளுக்காக அவசர வியாபாரத் தேவைகளுக்காக மொத்தக் கடன் பெறுமதியில் 10 சதவீதத்தினைத் துரிதமாகவும் தொந்தரவின்றியும் பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் வசதி.
தகைமை
- உத்தமாவிக் கடனினை 18 முதல் 60 வயது வரையிலான பெண்களினால் பெற்றுக்கொள்ள முடியும் (கடன் முதிர்ச்சியின்போது 65 வயதிற்கு மேற்பட்டிருக்கக்கூடாது)
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
- வங்கியினால் தேவைப்படுத்தப்படும் வேறு ஏதாவது ஆவணங்கள்
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்